டான்ஸ் ஆடிய கவுண்டர்!

டான்ஸ் ஆடிய கவுண்டர்!

செய்திகள் 16-Jan-2014 10:50 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழகத்தின் பெரும் பகுதிகளில் மழை பொய்த்து விட்டாலும் ,தஞ்சாவூர் மாவட்டத்தில் கவுண்டமணி பாடும் ஒரு பாடல் மழை வரும் என்ற நம்பிக்கையை தருகிறது . ’ ஜீரோ ரூல்ஸ் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவ பாலன் தயாரிக்க , கௌதம் மேனனின் உதவியாளர் ஆரோக்கிய தாஸ் இயக்கும், ‘ 49 ஓ’ திரைப்படத்திற்காக கவுண்டமணி ஆடிப்பாடும் இப்பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ‘‘ இந்தப் பாடல் மழை வர உத்திர வாதம் அளிக்கிறதோ இல்லையோ, சிரிப்பு மழைக்கு உத்திரவாதம் அளிக்கிறது’’ என்கிறார் கவுண்டமணியுடன் பணியாற்றும் உற்சாகத்தில் இருக்கும் இயக்குனர் ஆரோக்கிய தாஸ்! மேலும் அவர் கூறும்போது,

‘‘கவுண்டமணி சார் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மறக்க முடியாத அனுபவமாகும் .அவருடைய தொழில் பக்தி ஒப்பிட முடியாதது. நகைசுவையில் அவருடைய பலம் timing sense என்பது நாம் அனைவரும் அறிந்ததே , ஆனால் படப்பிடிப்பிலும் அவருடைய நேரம் தவறாமை - timing sense பிரமிப்பூட்டியது. இந்தப் படத்தில் அவர் உதிர்க்கும் வசனம் ஒவ்வொன்றும் அவரது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும் . ‘49 ஓ’ அரசியல் படமல்ல , நகைசுவை மிளிர சொல்லப்படும் ஒரு புத்தி சாலித்தனமான படம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - டிரைலர்


;