நடிகை அஞ்சலி தேவி காலமானார்!

நடிகை அஞ்சலி தேவி காலமானார்!

செய்திகள் 13-Jan-2014 4:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி இன்று (13-1-14) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. இவர், ‘நிரபராதி’, ‘சர்வாதிகாரி’, ‘அடுத்த வீட்டு பெண்’, ‘மர்மயோகி’ என ஏராளமான தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்தவர். 1936-ஆம் ஆண்டில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி தேவி.

ஆந்திராவில் பிறந்த இவரது நிஜப் பெயர் அஞ்சனி குமாரி. சினிமவுக்காக இவருக்கு அஞ்சலி தேவி என்ற பெயரை சூட்டியவர் பழம் பெரும் இயக்குனர் புல்லையா. கிட்டத்தட்ட 350 படங்களில் நடித்துள்ள அஞ்சலி தேவி தமிழ், தெலுங்கு சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து கண்ணியமான ஒரு நட்சத்திரமாக பிரகாசித்து வந்தார்! அந்த நட்சத்திரம் இப்போது விண்ணுலகிற்கு சென்று விட்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;