பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த நமீதா!

பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த நமீதா!

செய்திகள் 13-Jan-2014 12:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்னை கேளம்பாக்கத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள SMK Fomra Institute of Technology –யில் பொறியியல் மாணவ மாணவியருடன் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தார் நமீதா.

மாணவ மாணவியரின் சுற்றுப்புறச்சூழல் குறித்த பட்டிமன்றம், மாணவியரின் நடன நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ரசித்த நமீதா மேடையில் ஏறி அவர்களுடன் நடனமாடியதுடன், கோலம் போட்டும், உறியடித்தும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கல்லூரி சார்பில் சேகரித்து வைத்திருந்த உதவிப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்கினார்.

அதன் பிறகு பேசிய நமீதா, ‘‘ இங்கே எத்தனை பேர் ரத்ததானம் செய்துள்ளீர்கள்?’’ என்று கேட்டார். பாதி மாணவர்கள் செய்திருந்தனர். இவ்வளவு பேர் செய்துள்ளீர்களா என ஆச்சர்யப்பட்ட நமீதா அவர்களை பாராட்டினார். மேலும் உடல் தானம் எத்தனை பேர் செய்துள்ளீர்கள் என்பதற்கு ஏறக்குறைய நூறு பேர் செய்திருந்ததாக கை உயர்த்தினர். ‘‘ இது நல்ல மாற்றம்! மாணவர்கள் இவ்வளவு சமூக அக்கறையோடு இருப்பது பாராட்டிற்குரியது. வரும்காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்பதோடு சம்பாதிப்பதோடு நமது சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு வேண்டும். அதை இந்த காலேஜில் பார்க்கிறேன். மகிழ்கிறேன்’’ என்றார்.

மேலும், “ரத்ததானம் அல்லது உடல்தானம் செய்தவர்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் அதை செய்ததற்கான சான்றிதழோடு வந்தால் போதுமானது. இதன் மூலம் பல உயிர்கள் நீண்டு வாழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது’’ என்று பேசினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;