அனிருத் மீது புகார்?

அனிருத் மீது புகார்?

செய்திகள் 13-Jan-2014 12:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'காதலில் சொதப்புவது எப்படி' படத்திற்கு பிறகு பாலாஜி மோகன் இயக்கும் படம் ' வாய் மூடி பேசவும்'. துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்கும் இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

‘ரேடியன்ஸ் குரூப் - ஒய்நாட் ஸ்டுடியோ’ இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முதலில் இசையமைக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவருக்கு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு 'வாய் மூடி பேசவும்' பட வேலையில் அனிருத் மும்முரம் காட்டாததால், ராகவேந்திரா என்ற புதிய இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யபட்டார். இதனால் அனிருத்திடம், கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டபோது அதற்கு அவரிடமிருந்து சரியான பதில் வராததால் தாயாரிப்பாளர்கள் சங்கத்தில் அனிருத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;