நட்பை வளரவைத்த ஜில்லா!

நட்பை வளரவைத்த ஜில்லா!

செய்திகள் 13-Jan-2014 11:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம், ‘ஜில்லா’. இந்தப் படத்தை தயாரித்த ‘ சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் அதிபர் ஆர்.பி.சௌத்ரி சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

‘‘பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'ஜில்லா', 'வீரம்' இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் எங்களது நிறுவனம் தயாரித்த 'ஜில்லா' படத்தின் கலெக்‌ஷன் விஜய் நடித்த மற்ற படங்களை விட அதிகம்! எல்லா ஊரிலிருந்தும் நல்ல கலெக்‌ஷன் வருவதாக வினியோகஸ்தர்கள் ஃபோன் பண்றாங்க.

மோகன்லால் கேரளாவில் பெரிய அளவில் கலெக்‌ஷன் வருவதாக ஃபோன் பண்ணி சொன்னார். ஒரு பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எனக்கும் அவருக்கும் இடையில் பேச்சு வார்த்தை இருந்தது கிடையாது. இப்போது அவர் ‘ஜில்லா’ படத்தோட வெற்றி குறித்து பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஜில்லா’வின் வெற்றி' எங்களுக்கிடையிலான நட்பை தொடர வைத்துள்ளது. இதில் எனக்கு ரொம்பவும் சந்தோஷம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;