அஜித்துக்கு விஜய் பாராட்டு!

அஜித்துக்கு விஜய் பாராட்டு!

செய்திகள் 13-Jan-2014 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’சூப்பர்குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பில் விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் 'ஜில்லா'. இன்று காலை இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், ‘‘உலகம் முழுவதும் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் 'ஜில்லா' படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். ரொம்பவும் சந்தோஷம்.

முதலில் எனது ரசிகர்களுக்கு நன்றி! படம் வெளியாகும் முதல் நாள் குளிரையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களுக்கு வந்து அலங்காரம் செய்துள்ள காட்சிகளை வீடியோவில் பார்த்தேன். இதன் பின்னால் இருந்த எல்லோருக்கும் நன்றி! மேலும் அஜித் அவர்களின் 'வீரம்' படமும் நன்றாக வந்துள்ளது என்று கேள்விப் பட்டேன். அதில் பங்குபெற்ற அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;