7-ஆவது எடிசன் விருது வழங்கும் விழா!

7-ஆவது எடிசன் விருது வழங்கும் விழா!

செய்திகள் 13-Jan-2014 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த 6 வருடங்களாக தமிழ்த்திரையுலகினரின் சாதனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு, 'எடிசன் விருது வழங்கும் விழாக்குழு' விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதேபோல இந்த வருடமும் 2013-ஆம் ஆண்டுக்கான கலைஞர்களின் பட்டியலை ஆன் லைன் மூலம் வாக்களித்து, தேர்வு செய்ய வசதியாக வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அம்பிகா எம்பயர் ஹோட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, நடிகை சஞ்சனாசிங், பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களுக்கு ஃபிப்ரவரி 16-ஆம் தேதி மாலை 4மணிக்கு சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மலேஷிய கவர்னர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதுடன், தமிழ் சினிமா நடன கலைஞர்களுடன் மலேஷியா, சிங்கப்பூர் நடனக் கலைஞர்களும் இணைந்து நடனமாட உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்கிட்ட மோதாதே - டிரைலர்


;