மணிரத்னத்தின் அடுத்த படம்?

மணிரத்னத்தின் அடுத்த படம்?

செய்திகள் 13-Jan-2014 10:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’கடல்’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படம் என்ன? என்பது தான் பெரும்பாலான கோலிவுட் ரசிகர்களின் தற்போதைய கேள்வி! சமீபத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த சில மலையாள படங்களை பார்த்திருக்கிறார் மணிரத்னம்! அந்தப் படங்களில் ஃபஹத்தின் பெர்ஃபார்மென்ஸ் மணிரத்னத்தை ரொம்பவும் அட்ராக்ட் செய்ய, ஃபஹத்தை வைத்து படம் இயக்க் ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்துள்ளார் மணிரத்னம். இது குறித்து சமீபத்தில் ஃபஹத் பாசிலே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்! இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்படும் மகேஷ் பாபுவை வைத்து இயக்கவும் ஒரு கதையை ரெடி செய்திருக்கிறாராம் மணிரத்னம். இது பக்கா ஒரு கமர்ஷியல் சப்ஜெக்ட்டாம்! அடுத்து இந்த கதையைதான் மணிரத்னம் இயக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது! இது தவிர பாலிவுட்டிற்கான ஒரு கதையும் மணி மனதில் இருக்கிறதாம்! சமீபத்தில் இவர் இயக்கிய,. ‘கடல்’ கை கொடுக்காத நிலையில் தனது அடுத்தப் படம் பட்டையை கிளப்புகிற மாதிரியான ஒரு படமாக இருக்க வேண்டும் என்பதால் முதலில் எந்தக் கதையை இயக்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;