‘ஜில்லா’வுக்கு பேனர் வைத்த கலாபவன் மணி!

‘ஜில்லா’வுக்கு பேனர் வைத்த கலாபவன் மணி!

செய்திகள் 11-Jan-2014 5:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு திரைப்படத்தை வரவேற்று கட்-அவுட் மற்றும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவது பெரும்பாலும் அந்தப் படம் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களாக இருப்பார்கள்! ஆனால் கேரளாவில் நேற்று வெளியாகிய ’ஜில்லா’ படத்தை வரவேற்று (‘ஜில்லா’வுடன் எந்த சம்பந்தமும் இல்லாத…) ஒரு பிரபல நடிகர் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்து எல்லாரையும் வியக்க வைத்தார் என்றால் நம்புகிறீர்களா? நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும்! அந்த நடிகர் வேறு யாருமல்ல, ஏராளமான மலையாள படங்களில் கதாநாயகனாக நடித்தவரும், பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்தவருமான கலாபவன் மணி தான்!

கலாபவன் மணியின் சொந்த ஊர் எர்ணாகுளம் பக்கத்திலுள்ள சாலக்குடி! இங்குள்ள சுரபி தியேட்டரில் நேற்று ‘ஜில்லா’ படம் வெளியாக, காலை காட்சியை பார்க்க நிறைய ரசிகர்கள் கூடியிருந்தார்கள்! திடீரென்று ஒரு பேனருடன் அங்கு வந்த கலாபவன் மணியை பார்த்ததும் ரசிகர்களின் உற்சாகம் இரு மடங்காகியது! கலாபவன் மணி எடுத்து வந்திருந்த ஃப்ளெக்ஸ் பேனரை தியேட்டருக்கு முன் வைக்கப்பட்டதும் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆராவாரமிட்டனர்! கலாபவன் மணி வைக்கப்பட்ட அந்த பேனரில், ‘நட்சத்திர ராஜா’வான மோகன்லாலும், தமிழகத்தின் ‘இளைய தளபதி’ விஜய்யும் இணைந்து நடித்த ’ஜில்லா’ வெற்றிபெற இந்த சிறிய கலைஞனின் வாழ்த்துக்கள்’ என்று பொருள்படும் படி மலையாளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மற்ற ஹீரோக்கள் நடித்த ஒரு படத்தை வரவேற்றும், அவர்களுக்கு வாழ்த்து சொல்லியும், முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் பேனர் வைத்த இந்த சம்பவம் சினிமாவில் அனைவரையும் பேசவைத்துள்ளது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;