கொஞ்சம் சிந்தியுங்கள்!

கொஞ்சம் சிந்தியுங்கள்!

செய்திகள் 11-Jan-2014 4:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய மொழி சினிமாவை எடுத்துக் கொண்டால் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் அவ்வப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் உருவாகி வெளியாவதுண்டு! இதற்கு நிறைய படங்களை உதாரணமாக சொல்லலாம்! இதுபோன்ற படங்களில் நடிக்க நம் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்! தெலுங்கு படங்களான ’சண்டி’யில் ப்ரியாமணி, ‘பவித்ரா’வில் ஸ்ரேயா, ‘அருந்ததி’ படத்தில் அனுஷ்கா… என ஏற்கெனவே பல ஹீரோயின் ஓரியன்டட் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இப்போது ஹிந்தி ‘கஹானி’யின் தெலுங்கு ரீ-மேக்காக உருவாகும் ‘அனாமிகா’வில் நயன்தாராவும், பிரம்மாண்ட படமாக உருவாகிக் கொண்டிருக்கும் ‘ருத்ரம்மா தேவி’ படத்தில் அனுஷ்காவும் நடித்து வருகிறார்கள். ஆனால் தமிழில் மட்டும் இதுபோன்ற ஹீரோயின் ஓரியன்டட் படங்கள் உருவாகுவதுமில்லை, இங்குள்ள நடிகைகளுக்கு அதுபோன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைப்பதுமில்லை! தமிழ் திரைப்பட இயக்குனர்களே, தயாரிப்பாளர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;