சீனாவில் வடிவேலு!

சீனாவில் வடிவேலு!

செய்திகள் 11-Jan-2014 12:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வரும் படம், ‘ஜெகஜாலா புஜபல தெனாலி ராமன்’. வடிவேலு, தெனாலிராமன் - கிருஷ்ண தேவராயர் என இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ‘போட்டா போட்டி’ படத்தை இயக்கிய யுவராஜ் இயக்கி வருகிறார். சென்னையில், புராதன காலத்து பிரம்மாண்ட அரங்கங்கள் போன்ற செட்டை போட்டு, அதில் கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது! இதனை தொடர்ந்து சில காட்சிகளை சீனாவில் படம் பிடிக்க திட்டமிட்ட இயக்குனர் யுவராஜ், வடிவேலு உட்பட படக்குழுவினருடன் சீனா சென்றுள்ளனர்!

அங்கு படப்பிடிப்பை முடித்த கையோடு, ஹைதராபாத்திற்கு சென்றும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். ’ஏஜிஎஸ்; நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;