கேரளாவில் ‘ஜில்லா’ சாதனை!

கேரளாவில்  ‘ஜில்லா’ சாதனை!

செய்திகள் 11-Jan-2014 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கேரளாவை பொறுத்த வரையில் விஜய் நடிக்கும் படங்கள் என்றால் அதற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது! விஜய் நடித்து தமிழகத்தில் அதிக நாட்கள் ஓடாத சில படங்கள் கூட கேரளாவில் வசூலில் கல்லா கட்டியதுண்டு! இந்த நிலையில் ’ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடிக்கிறார் என்ற செய்தி வெளியான நாளிலிருந்தே, ‘ஜில்லா’ மீதான எதிர்பார்ப்பு கேரளாவில் நாளுக்கு நாள் ஜெட் வேகம் பிடித்தது. இதற்கு காரணம் மோகன்லால் - விஜய் என்ற காம்பினேஷன் தான்! இத்துடன், ‘ஜில்லா’வின் கேரள வினியோக உரிமையை மோகன்லால் பெற்றிருந்ததால் மேலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமானது! இதனால் ’ஜில்லா’ வெளியாகிற நேரத்தில் வேறு எந்த மலையாள படங்களையும் ரிலீஸ் செய்யாமல் மவுனம் காத்தார்கள் பல மலையாள பட தயாரிப்பாளர்கள்! இந்நிலையில் நேற்று கேரளாவில் 207 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது ’ஜில்லா’. கேரளாவை பொறுத்தவரையில் மோகன்லால், மம்முட்டி நடிக்கிற நேரடி மலையாள படங்கள் ரிலீசாகிற பரபரப்போடும், எதிர்பார்ப்போடும், ‘ஜில்லா’ படம் வெளியாகியிருப்பதாக சொல்லப்படுகிறது! இப்போது ’ஜில்லா’வுக்கு கேரளாவிலும் பெரிய வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அஜித்தின் ’வீரம்’ படமும் 100 தியேட்டர்களில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;