நாளை முதல் நேர் எதிர்!

நாளை முதல் நேர் எதிர்!

செய்திகள் 11-Jan-2014 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வி.கிரியேஷன்ஸ்’ சார்பில், ‘கலைப்புலி’ எஸ்.தாணு வழகும் படம் ’நேர் எதிர்’. இந்தப் படத்தில் பார்த்தி, ரிச்சர்ட் கதாநாயகர்களாக நடித்திருக்க, ஐஸ்வர்யா மேனன், வித்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். நவநாகரீக வளர்ச்சியால் நமது சமூகமும், கலாச்சாரமும் எப்படியெல்லாம் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதை கருவாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு இரவிலேயே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குன எம்.ஜெயப்ரதீப் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ராஜாமதி இசை அமைத்திருக்கிறார். க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை நடைபெறவிருக்கிறது. படம் இந்த மாதம் 24-ஆம் தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மதுரை - டிரைலர்


;