‘தல’போல வந்த ரசிகர்கள்!

‘தல’போல வந்த ரசிகர்கள்!

செய்திகள் 10-Jan-2014 3:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் நடித்து இன்று ரிலீசாகியுள்ள ’வீரம்’ படம் ‘தல’ ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது! அஜித், இந்தப் படத்தில் முழுக்க முழுக்க வெள்ளை வேட்டி - சட்டையுடன் கிராமத்து கெட்-அப்பில் தோன்றி நடித்திருக்கிறார். இன்று தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் நடைபெற்ற இப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க வந்த பல ரசிகர்கள் ‘வீரம்’ அஜித்தை போல வெள்ளை வேட்டி- சட்டை அணிந்து வந்து கலகலக்க வைத்தனர்! இதில், சென்னை உதயம் தியேட்டரில் படம் பார்க்க வந்த ஒரு ரசிகர் ‘வீரம்’ அஜித்தை போலவே வெள்ளை வேட்டி- சட்டை, நரைத்த தலைமுடி - தாடியுடன், கருப்பு கண்ணாடி அணிந்து வந்து, படம் பாரக்க வந்த மற்ற ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து உற்சாகப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது! ஆக, தல ரசிகர்களுக்கு இந்த பொங்கல் சர்க்கரை பொங்கல் மட்டுமல்ல’ தல பொங்கலாகவும் அமைந்து விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;