இனிய குரலோனுக்கு இன்று பிறந்த நாள்!

இனிய குரலோனுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 10-Jan-2014 10:28 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையுலகில் பல ஆண்டு காலமாக தன் இனிய குரலால் ரசிகர்களை தன் பக்கம் கட்டிப் போட்டு வைத்திருப்பவர் கே.ஜே.யேசுதாஸ்! இந்தியாவின பெரும்பாலான மொழிகளிலும் பாடல்களை பாடி ஆயிரக்கணக்கான விருதுகளை பெற்று, கோடானு கோடி இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டு வாழ்ந்துவரும் ‘கான கந்தர்வன்’ கே.ஜே.யேசுதாஸ் பிறந்த நாள் இன்று! இந்திய இசை உலகில் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வரும் கே.ஜே.யேசுதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைவதோடு, தெய்வீக இசை வரம் பெற்ற அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நம்மையெல்லாம் மகிழ்வித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தித்து கொள்கிறோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;