வீரம் VS ஜில்லா!

வீரம் VS ஜில்லா!

செய்திகள் 9-Jan-2014 5:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக தயாராகி வந்த விஜய்யின் ‘ஜில்லா’ மற்றும் அஜித்தின் ‘வீரம்’ ஆகிய படங்களின் ‘கவுன்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படங்களுள் எந்தப் படம் அதிக ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பதுதான் சினிமா ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு! ஏற்கெனவே கடந்த 2007-ஆம் ஆண்டில் விஜய் நடித்த, ‘போக்கிரி’, அஜித் நடித்த, ‘ஆழ்வார்’ ஆகிய படங்கள் பொங்கலையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி ஒரே தினத்தில் ரிலீசானது. இந்தப் படங்களில் விஜய்யின் ‘போக்கிரி’ வெற்றிப் படமாக அமைந்தது. அஜித் நடித்த, ‘ஆழ்வாரு’க்கு எதிரபார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக விளங்கி வரும் விஜய் - அஜித் நடித்துள்ள படங்கள் இந்த வருட பொங்கலையொட்டி நாளை ரிலீசாகிறது. கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே எண்ணிக்கையிலான ரசிகர் வட்டம் இருப்பதாலும், பெரும்பாலான பொதுவான ரசிகர்களும் இந்தப் படங்களை எதிர்பார்ப்பதாலும், ‘வீரம்’, ‘ஜில்லா’ படங்கள் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம்! ஆக, தல – இளைய தளபதி ரசிகர்களை பொறுத்தவரையில் இந்த வருட பொங்கல் நாளையே ஆரம்பமாகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;