அஜித்- எம்.ராஜேஷ் கூட்டணி?

அஜித்- எம்.ராஜேஷ் கூட்டணி?

செய்திகள் 9-Jan-2014 4:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் நடித்துள்ள, ‘வீரம்’ படம் நாளை ரிலீசாக, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ‘தல’ ரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி! ‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் அஜித்துக்காக இயக்குனர் ராஜேஷும் ஒரு கதையை ரெடி செய்து வருகிறாராம். ராஜேஷ் அடுத்து ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகு அஜித் படத்தை இயக்க இருக்கிறாராம் ராஜேஷ்! ஆனால் ஆர்யா இப்போது நடித்து வரும் ‘புறம்போக்கு’ மற்றும் ‘மீகாமென்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகே ராஜேஷ் இயக்கும் படத்திற்கு வருகிறார் ஆர்யா! இதனால் ராஜேஷ் - அஜித் கூட்டணி படம் உருவாக நிறைய காலம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;