காதலரை மணக்கிறார் பிபாஷா பாசு!

காதலரை மணக்கிறார் பிபாஷா பாசு!

செய்திகள் 9-Jan-2014 2:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹிந்தி நடிகர் ஜான் ஆப்ரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து பிபாஷா பாசு ஹிந்தி நடிகர் ஹர்மன் பவேஜாவை காதலிக்க துவங்கினார். இந்நிலையில் ஜான் ஆப்ரகாம் பிரியா ராஞ்சல் என்பவரை சமீபத்தில் திருமணம் புரிந்தார். இதையடுத்து பிபாஷா பாசுவும் தனது காதலர் ஹர்மன் பவேஜாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடனும் நடக்க இருக்கிறது. இப்போது ஷில்பா ஷெட்டி தயாரிக்கும் ’திஷ்கியான்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் ஹர்மன். இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருக்கிறது. இந்த படம் வெளியானதும் இருவரும் சேர்ந்து தங்களது திருமண தேதியை முடிவு செய்து அறிவிக்க உள்ளனர். இந்த தகவலை நடிகை பிபாஷா பாசுவே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலோன் - டிரைலர்


;