‘மஞ்சப்பை’யிலிருந்து வெளியேறிய ஜிப்ரான்!

‘மஞ்சப்பை’யிலிருந்து வெளியேறிய ஜிப்ரான்!

செய்திகள் 9-Jan-2014 1:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’வாகைசூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இசை அமைப்பாளர் ஜிப்ரான். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசை அமைத்து வரும் ஜிப்ரான் இசையில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’. இந்தப் படம் தவிர கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு இசை அமைத்து வரும் ஜிப்ரான், விமல் - லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் ‘மஞ்சப்பை’ படத்திற்கும் இசை அமைக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன்னால் ‘மஞ்சப்பை’ படத்திற்கு இசை அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருப்பதால் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக தன் ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஜிப்ரான்!

’மஞ்சப்பை’ படத்திலிருந்து ஜிப்ரான் விலகியதை தொடர்ந்து ‘நீர்பறவை’ படத்திற்கு இசை அமைத்த ரகுநந்தன் இசை அமைக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மருது - டிரைலர்


;