ஹன்சிகாவின் ‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’

 ஹன்சிகாவின்  ‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’

செய்திகள் 9-Jan-2014 12:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த 'சிவம் அசோசியேட்ஸ்’ எஸ்.சுந்தரலட்சுமி தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தேனிகா நானா ரெடி’ என்ற படத்தை தமிழில் ‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷ்ணு மோகன்பாபு நடிக்க, கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சுமன், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ், ராஜேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நாகேஸ்வர ரெட்டி இயக்கியிருக்கிறார்.

தனது தங்கை இன்னொரு மதத்தை சேர்ந்தவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டதால் கோபப்பட்ட பிரபுவின் ஆட்கள் சுமனின் காலை வெட்டி விடுகிறார்கள். அதனால் பிரபுவிற்கும், தங்கை கணவர் சுமனுக்கும் மோதல் அதிகமாகிறது.அந்த இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க ஒரு இளைஞன் வருகிறான். அவனுக்கும், பிரபு மகளுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதை. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;