வேற்றுகிரக வாசியாக ஆமீர்!

வேற்றுகிரக வாசியாக ஆமீர்!

செய்திகள் 9-Jan-2014 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆமீர்கான் நடித்து சமீபத்தில் வெளியான, ‘தூம் 3’ இந்திய சினிமா சரித்திரத்திலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையோடு ஓடிக்கொண்டிருக்க, அடுத்த சாதனைக்காக களத்தில் இறங்கி விட்டார் ஆமீர்கான்! ‘தூம் 3’ படத்தைத் தொடர்ந்து ஆமீர் நடிக்க கமிட் ஆன படம், ‘பீகே’. இந்தப் படத்தை பாலிவுட் பிரபலம் ராஜ்குமார் ஹிரானி இயக்கி, தயாரிக்கிறார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த பிரம்மாண்ட படத்தில் ஆமீர் இதுவரை நடித்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கிறார். அதாவது வேற்றுகிரக வாசியாக நடிக்கும் ஆமீர், அந்த கிரகத்திலிருந்து நம் பூமிக்கு வருகிறார். அவர் பூமிக்கு வந்த பிறகு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதை! அந்நிய கிரகத்திலிருந்து நம் பூமிக்கு வரும் ஆமீரின் அறிமுக காட்சியில் அவர் நிர்வாணமாக தோன்றுவாராம்! அதற்குப் பிறகு பெண்ணாக, வெகுளியான மனிதராக என நமக்கு பல சர்ப்ரைஸ்கள் தர இருக்கிறார் ஆமீர்கான்!
ஆக, ஆமீர் என்றாலே வித்தியாசம்தான், வசூல்தான் போல!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;