தனுஷுக்கு ஜோடியாகும் காஜல்!

தனுஷுக்கு ஜோடியாகும் காஜல்!

செய்திகள் 9-Jan-2014 11:04 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனுஷுக்கு ஜோடியாகும் காஜல்! ‘காதலில் சொதப்புவது எப்படி’ புகழ் பாலாஜி மோகன் தற்போது இயக்கி வரும் படம் ‘வாய் மூடி பேசவும்’. துலகர் சல்மான், நஸ்ரியா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகியுள்ள இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் பாலாஜி மோகன்! இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ஏற்கெனவே தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தில் காஜல் அகர்வால் தான் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தார். அதற்குப் பிறகு அந்த கேரக்டரில் திவ்யா ஸ்பந்தனா (’குத்து’ ரம்யா) நடித்தார். அடுத்து பாலாஜி மோகன் இயக்கும் படம் மூலம் தனுஷ்- காஜல் அகர்வால் முதன் முதலாக ஜோடி சேருகிறார்கள்.
இந்தத் தகவலை இயக்குனர் பாலாஜி மோகனே தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் பெயர், மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை! தனுஷ் இப்போது ‘அனேகன்’, ‘வேலியில்லா பட்டதாரி’ மற்றும் பால்கி இயக்கும் ஹிந்திப் படம் என மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;