‘ஜில்லா’வுக்கு தடை?

‘ஜில்லா’வுக்கு தடை?

செய்திகள் 9-Jan-2014 10:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் நடித்துள்ள, ‘ஜில்லா’ படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை அடுத்துள்ள சேலையூரை சேர்ந்த ஆர்.மகேந்திரன் சிவில் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சிட்டி சிவில் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில்,

‘‘சௌமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா’ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்தேன். இந்த ’ஜில்லா’ என்ற படத்தின் தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் டிவி தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ஆம் ஆண்டு பதிவு செய்தேன். இந்த தமிழாக்கம் செய்யப்பட்ட ‘ஜில்லா’ படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளேன். அதன் பிறகு இந்தப் படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்து காத்திருந்தேன். இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10-ஆம் தேதி வெளியாகப் போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது!

இந்த வழக்கு சம்பந்தமாக ‘ஜில்லா’ தயாரிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை இன்று நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;