யாழ்ப்பாணம் - பெயர் காரணம்?

யாழ்ப்பாணம் - பெயர் காரணம்?

செய்திகள் 8-Jan-2014 3:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'மிஸ்டிக் ஃபிலிம்ஸ்’ சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் ‘யாழ்’. இந்தப் படத்தில் வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ஆதி.கருப்பையா மற்றும் நசீர் கவனிக்க, எஸ்.என் .அருணகிரி இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் எம்.எஸ்.ஆனந்த் படம் பற்றி குறிப்பிடுகையில், ‘‘யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி.

இத்திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது. இதில் இந்திய, தமிழ் கதாபாத்திரங்கள் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத்தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப் படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும் , பாடலாசிரியர்களும் இலங்கை தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை! வசனம் முழுவதும் இலங்கை தமிழிலே இருக்கும்.

‘யாழ்’ என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக் கருவி. பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக் கொண்டு சைவ சித்தாந்த கருத்துகளையும், தமிழர்களின் கலை மற்றும் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராக சென்று பரப்பினார்கள். யாழ்ப்பாணம் என்ற ஊருக்கு பெயர் வந்ததே அதனால் தான்!

யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் இப்பொழுது இறுதி போரின்போது அவர்களுக்கு நடந்த நட்பு, காதல், போன்ற சம்பவங்களை மிக ஜனரஞ்சகமாக எடுத்துள்ளோம். இதுவரை உலக சினிமாவிலே சொல்லப்படாத திரைக்கதை இதில் பார்ப்பீர்கள்’’ என்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டியூப்லைட் - டிரைலர்


;