’மறுமுனை’யில் சிம்பு, சின்மயி!

’மறுமுனை’யில் சிம்பு, சின்மயி!

செய்திகள் 8-Jan-2014 2:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சின்னத்திரையில் பேச்சரங்கம், குழந்தைகளுக்கான ‘சின்ன சின்ன ராகம்’ மற்றும் புராண தொடர் ‘கால பைரவன்’ ஆகிய நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கிய ‘எம்.பி.எல்.ஃபிலிம்ஸ்’ நிறுவனம் முதன் முதலாக தயாரித்துள்ள படம் ’மறுமுனை’. இந்தப் படத்தில் பிரபல ஜோதிடர் நெல்லை மு.வசந்தனின் மகன் மாருதி கதாநாயகனாக நடிக்கிறார். விஷுவல் கம்யூனிகேஷன் படித்த இவர் இயக்குனர் விக்ரமன், ‘யார்’ கண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருப்பதோடு, நடிப்பு மீதுள்ள ஆசையால் நடனம், நடிப்பு ஆகியவற்றிலும் பயிற்சி எடுத்துள்ளார். ‘மறுமுனை’ படத்தை பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற மாரிஸ் குமார் இயக்குகிறார். இந்தப் படத்திற்காக மாரிஸ் குமார் எழுதியுள்ள, ‘பெண்ணே பெண்ணே…’ என துவங்கும் பாடலை சிம்பு, சினமயி பாடியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்தியா பாகிஸ்தான் - ஒரு பொண்ண பார்த்தேன் மாமா வீடியோ சாங்


;