சமூகவிரோதிகளிடம் சிக்கிய வைபவ்!

சமூகவிரோதிகளிடம் சிக்கிய வைபவ்!

செய்திகள் 8-Jan-2014 12:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’கேமியோ ஃபிலிம்ஸ’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘டமால் டுமீல்’. இந்தப் படத்தில் வைபவ், ரம்யா நம்பீசன் ஜோடியாக நடிக்க, அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்குகிறார். தமன் இசை அமைக்க, ஆர்.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் குறித்து இயக்குனர் ஸ்ரீ கூறும்போது, ‘‘5, 10 கொடுத்தாவது தன்னுடைய காரியத்தை சாதித்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி.

வசதியாக வாழ்ந்துகொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான்! இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரண்டு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான் மணி! இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. மணி செய்த தவறு என்ன? ஏன் இவர்கள் மணியை தேடுகிறார்கள்? மணி இவர்களிடம் சிக்கினானா இல்லை தப்பினானா என்பது படத்தின் முடிவு. இதில் மணியாக வைபவ் நடிக்க, இளவரசுவாக கோட்டா சீனிவாச ராவ் நடிக்கிறார். காமாட்சி சுந்தரமாக ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். ஜாலியான காமெடி, ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது ‘டமால் டுமீல்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;