ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெங்கடேஷ்!

ஸ்ரீப்ரியா இயக்கத்தில் வெங்கடேஷ்!

செய்திகள் 8-Jan-2014 12:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபகாலத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்களின் வசூலை எல்லாம் முறியடித்து தற்போது சூப்பர் ஹிட்டாகி ஓடிக் கொண்டிருக்கும் மலையாள படம் ’திருசியம்’. மோகன்லால் மீனா ஜோடியாக நடித்து ஜித்து ஜோசஃப் இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ரீ-மேக் உரிமையை மோகன்லாலின் மைத்துனர் சுரேஷ் கே.பாலாஜி வாங்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை தமிழில் ரீ-மேக் செய்து நடிக்க விக்ரம் உடப்ட தமிழின் முன்னணி நடிகர்கள் சிலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் ‘திருசியம்’ தெலுங்கில் ரீ-மேக் ஆவது முடிவாகி விட்டது! தெலுங்கு ரீ-மேக்கில் வெங்கடேஷ் கதையின் நாயகனாக நடிக்க, நடிகை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். இவர் தற்போது இயக்கியிருக்கும் ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ என்ற தமிழ் படம், தெலுங்கில் ‘மாலினி 22 விஜயவாடா’ என்ற பெயரில் விரைவில் ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;