‘தூம் 3’ இமாலய சாதனை!

‘தூம் 3’ இமாலய சாதனை!

செய்திகள் 8-Jan-2014 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் உலகம் முழுக்க வெளியாகி வசூலில் சாதனை படைத்து ஓடிக்கொண்டிருக்கும் ஹிந்திப் படம் ‘தூம் 3’. ஆமிர்கான், கத்ரீனா கைஃப், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா முதலானோர் நடித்து, விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கிய இப்படம் சென்ற மாதம் 20 ஆம் தேதி ரிலீசானது! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் ஒரே நேரத்தில் உலகம் முழுக்க வெளியாகி, இதற்கு முன் வசூலில் சாதனை படைத்த அத்தனை படங்களின் சாதனையையும் முறியடித்துள்ளது! அதாவது உலகம் முழுக்க இந்தப் படம் இதுவரையில் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இன்னமும் சூப்பராக வசூல் செய்து கொண்டிருக்கிறது. இந்திய சினிமா சரித்திரத்திலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை இப்போது ‘தூம் 3’ பெற்றிருக்கிறது!

‘தூம் 3’ படத்தின் சாதனையை முறியடிக்க அடுத்து யார் வருவார் என்பதுதான் இந்திய சினிமா ரசிகர்களின் தற்போதைய கேள்வி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;