விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்!

விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்!

செய்திகள் 8-Jan-2014 10:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்றைய தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிசியாக நடித்து வரும் நடிகர் யார் என்றால் அவர் விஜய் சேதுபதிதான்! நடிப்புடன் படத்தயாரிப்பிலும் களமிறங்கியுள்ள விஜய் சேதுபதி முதலில் ‘சங்குதேவன்’ என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தார்! ஆனால் ஏதோ சில காரணங்களால் அப்படத்தை கைவிடப்பட்டு, இப்போது ’ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாகி இயங்கி வருகிறார் விஜய் சேதுபதி! இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விஜய் சேதுபதி நடித்துள்ள, ’ரம்மி’ மற்றும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்கள் விரைவில் ரிலீசாகவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;