விஜய், அஜித் இடத்தில் விக்ரம்!

விஜய், அஜித் இடத்தில் விக்ரம்!

செய்திகள் 8-Jan-2014 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆந்திரா- ஒரிசா எல்லையில் அமைந்துள்ள இரயில் பாதை தமிழ் சினிமாவின் அழகிய லொகேஷனாக மாறி வருகிறது! விஜய் நடித்த, ‘வேலாயுதம்’ படத்திற்காக இங்கு படமாக்கப்பட்ட சண்டை காட்சியை தொடர்ந்து, விரைவில் திரைக்கு வரவிருக்கும் அஜித்தின், ‘வீரம்’ படத்திற்காகவும் இங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்தப் படங்கள் தவிர ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘ஐ’ படத்திற்காகவும் ஒரு சண்டை காட்சியின் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளது. விக்ரம் - எமி ஜாக்சன் ஜோடியாக நடிக்கும் ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு இத்துடன் முடிவடைந்ததாம்!

அழகான லொகேஷனாக அமைந்துள்ள இந்த இடத்தை படப்பிடிப்புக்காக தேர்வு செய்ய காரணம், இரயில்வே சம்பந்தப்பட்ட மற்ற இடங்களை விட இங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுவது எளிது என்பதோடு, கட்டணமும் மிகக் குறைவாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;