மீண்டும் சத்யராஜ் - அமலா பால்!

மீண்டும் சத்யராஜ் - அமலா பால்!

செய்திகள் 7-Jan-2014 3:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே, ‘ஆகதன்’ என்ற மலையாள படத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் மற்றுமொரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார். மலையாளத்தின் பிரபல இயக்குனர் ஜோஷி இயக்க, மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் ‘லைலா ஓ லைலா’ என்ற படத்தில் தான் சத்யராஜ நடிக்கிறார். இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, சத்யராஜுக்கு மாறுபட்ட ஒரு கேரக்டராம்! விஜய்யின் ’தலைவா’ படத்தில் இணைந்து நடித்த சத்யராஜ் - அமலா பால் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது.

காமெடி கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ஜோஷி முதன் முதலாக தமிழில் இயக்கிய, ‘ஏர்போர்ட்’ படத்தில் சத்யராஜ் தான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பதும், சத்யராஜ் தனக்குப் பிடித்த படங்களை குறிப்பிடும்போது ‘ஏர்போர்ட்’ படத்தை குறிப்பிட தவறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் தவிர மற்ற மொழிப் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வரும் சத்யராஜ் சமீபத்தில் ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இப்போது ராஜமௌலி இயக்கி வரும் ‘பாஹுபலி’ தெலுங்கு படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் சத்யராஜ்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 தமிழ் - டிரைலர்


;