திருமணத்தை வெறுக்கும் பிரபல நாயகி!

திருமணத்தை வெறுக்கும் பிரபல நாயகி!

செய்திகள் 7-Jan-2014 1:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவியுடன் ‘தாம் தூம்’ படத்தில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்த ஒல்லிக்குச்சி நடிகை கங்கணா ரணாவத். நிறைய ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ள இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லையாம்! இவர் நடித்து விரைவில் ரிலீசாகவிருக்கும் ’க்யூன்’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது தான் கங்கணா இப்படி ஒரு ஸ்டேட்மென்டை விட்டிருக்கிறார்! இதுபற்றி மேலும் அவர் கூறும்போது,

‘‘திருமணத்தை விட முக்கியமான பல விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கிறது. அதனால் எனக்கு திருமணம் செய்ய விருப்பமில்லை! தனியே வாழதான் பிடிக்கும். திருமணம் செய்து நிறைய பொறுப்புகளை சுமப்பதை விட, தனியாக வாழ்வதில் தான் அதிகம் சந்தோஷம் கிடைக்கிறது. இதுவரை தனியாக இருந்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இனியும் அப்படிதான் இருப்பேன்! தனியாக வாழ்பவர்கள் தான் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! அந்த வழியில் தான் நானும் பயணிக்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

26 வயது கங்கணா இப்படி கூறுவதற்கு காரணம் பாலிவுட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விஷயங்கள் ஆக இருக்கலாம் என்கின்றனர் கங்கணாவை நன்கு அறிந்த வட்டாரம்! ‘க்யூன்’ படத்தை தொடர்ந்து ‘ரிவால்வர் ராணி’ என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார் கங்கணா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

க்ரிஷ் 3 டிரைலர்


;