துணை முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

துணை முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 7-Jan-2014 12:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் கே.பாக்யராஜுக்கு தனி இடம் உண்டு! இவர் தனது படங்களின் மூலம் கதை சொல்லும் பாணியே தனி ரகம்! இவரது திரைக்கதை அமைப்பு, பாமர மக்களுக்கும் புரியும் படியாக இருக்கும் என்பது தனி சிறப்பு! சமீபகாலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தவர், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ’துணை முதல்வர்’ என்ற படம் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்! இவர் தொடர்ந்து நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களின் ’அவா’வாக இருக்கும்! விரைவில் துணை முதல்வராக நம்மை எல்லாம் மகிழ்விக்க இருக்கும் பாக்யராஜுக்கு இன்று பிறந்த நாள்! அவருக்கு ‘டாப் 10 சினிமா’வின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;