பிரபல நடிகைகளின் ‘டாட்டு’ ரகசியம்!

பிரபல நடிகைகளின் ‘டாட்டு’ ரகசியம்!

செய்திகள் 7-Jan-2014 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கைவசம் படங்கள் இருக்கிறதோ, இல்லையோ இந்தப் புத்தாண்டை கொண்டாடுவதில் எந்த குறையையும் வைக்கவில்லை நடிகை ப்ரியாமணி! புத்தாண்டு கொண்டாடத்திற்காக பாங்காங் சென்ற ப்ரியாமணி, அங்கு புலியுடன் கேஷுவலாக எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் சோஷியல் நெட்வொர்க்குகளில் வெளிவந்து எல்லோரையும் வாய் பிளக்க வைத்தது! இப்போது அம்மணி தன் கையில் டாட்டு போட்டு அதை ஒரு செய்தியாக்கி இருக்கிறார்! ப்ரியாமணி போட்டிருக்கும் டாட்டுவைப் போலவே பாலிவுட் அழகி ப்ரியங்கா சோப்ரா கையிலும் ஒரு டாட்டு இருக்கிறது!

இவர்கள் இருவரும் போட்டிருக்கும் டாட்டுவிற்கு மிகப் பொருத்தம் ஒன்று இருக்கிறது! அது என்னவென்றால், ப்ரியங்கா சோப்ரா போட்டிருக்கும் டாட்டுவில், ‘டாடீஸ் லிட்டில் கேர்ல்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்க, ப்ரியாமணி போட்டிருக்கும் டாட்டுவிலோ ’டாடீஸ் கேர்ள்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து ஒருவர் ப்ரியாமணியிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ப்ரியாமணி, ‘‘என் கையில் இப்படி பச்சை குத்துவதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவார் ப்ரியங்கா தான், அதில் என்ன தவறு?’’ என்பதை கேஷுவலாக ஒப்புக்கொண்டுள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேரி கொம் - டிரைலர்


;