பழம்பெரும் பின்னணிப் பாடகர் காலமானார்!

பழம்பெரும் பின்னணிப் பாடகர் காலமானார்!

செய்திகள் 7-Jan-2014 11:02 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாள சினிமாவில் 1956-ல் ‘நாயர் பிடித்த புலிவால்’ என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக அறிமுகம் ஆனவர் கே.பி.உதயபானு. ’சமசியா’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான இவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட மலையாள பாடல்களை பாடியுள்ளார். பெரும்பாலும் சோகப் பாடல்களை பாடி வந்த இவர் கடைசியாக பாடிய பாடல், 2011-ல் வெளியான, பிருத்திவிராஜ் நடித்த, ‘தாந்தோந்நி’ படத்திற்காக பாடிய பாடலாகும்! இவர், சிறந்த பாடகருக்கான கேரள அரசு விருதும், சங்கீத அகாடமி விருகும், 2009-ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.

77 வயதான கே.பி.உதயபானு, கடந்த ஒரு வருடமாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு பலவேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அந்த சிகிச்சை எல்லாம் பலன் அளிக்காமல் நேற்று முன் தினம் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். அவருக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் மலையாள திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு அரசு மரியாதையுடன் அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள மின் மையானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;