ஹேப்பி பர்த்டே சரோஜா தேவி!

ஹேப்பி பர்த்டே சரோஜா தேவி!

செய்திகள் 7-Jan-2014 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து புகழ்பெற்று விளங்கியவர் நடிகை சரோஜா தேவி! ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்., ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் என அன்றைய தமிழ் சினிமாவின் பெரும்பாலான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்ட சரோஜாதேவிக்கு இன்று இனிய பிறந்த நாள்! சமீபத்தில் சூர்யா நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான ‘ஆதவன், படத்தில் நடித்து நம்மையெல்லாம் மகிழ்வித்த ’கன்னடத்து பைங்கிளி’ சரோஜா தேவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;