ஸ்ருதிக்கு என்னாச்சு?

ஸ்ருதிக்கு என்னாச்சு?

செய்திகள் 7-Jan-2014 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் ஸ்ருதி ஹாசன். இவர் ராம் சரண் தேஜாவுடன் ஜோடியாக நடித்துள்ள தெலுங்கு படம், ‘யவடு’. இந்தப் படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், ‘ரேஸ் குர்ரம்’ என்ற படத்தில் நடிப்பதற்காகவும் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தார் ஸ்ருதிஹாசன்! நேற்று முன்தினம், ‘யவடு’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருதிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. தொடர்ந்து வாந்தியும் எடுத்துள்ளார்.

எனினும் வலியை பொறுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் அவருக்கு வலி அதிகரித்ததால் உடனே அவரை ஜூப்ளி ஹில்ஸ் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்ததால் அவர் சோர்வாக இருக்கிறார் என்பதால் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். சில நாட்கள் ஓய்வெடுத்தப் பிறகு ஸ்ருதி வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்துகொள்ளலாம் என்றும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;