சென்சார் அதிகாரிகள் பாராட்டிய படம்!

சென்சார் அதிகாரிகள் பாராட்டிய படம்!

செய்திகள் 6-Jan-2014 5:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கங்கா சினி கிரியேஷன்ஸ்' என்ற பட நிறுவனம் சார்பாக சி.மகேஷ்குமார் தயாரிக்கும் படம் 'என்னதான் பேசுவதோ'. இந்தப் படத்தில் கதாநாயகனாக விஜய்ராம் நடிக்க, கதாநாயகியாக தக்ஷா நகர்க்கர் நடிக்கிறார். இவர்களுடன் விக்னேஷ், தாஸ், சின்னச்சாமி, ரோஷன், ராலப்பள்ளி, ராமராஜன், சம்பத்ராஜ், நாகலிங்கம் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் ரவி படம் குறித்து கூறும்போது,

‘‘பீகார் மாநிலம் முஸார்பர்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பெண் குழந்தைகளை தங்கள் வறுமைக்காக விலைக்கு விற்கிறார்கள். குழந்தைகளை வாங்கி வளர்த்து மீண்டும் மறு விலைக்கு விற்பதற்கென்றே தரகர் கூட்டம் ஒன்று உள்ளது. அப்படி விற்கப்பட்டு வளர்ந்த பெண்குழந்தை தான் கதாநாயகி தக்ஷா நகர்க்கர். தன் தாய், தந்தை யாரென்றே தெரியாமல் வளர்ந்த நாயகி தன் சித்தப்பாவை நம்பி தமிழ்நாட்டில் குற்றாலத்திற்கு வந்து குடியேறுகிறாள். குற்றாலத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் கதாநாயகன் விஜய்ராம் மற்றும் நான்கு நண்பர்களுக்கும் கதாநாயகிக்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது. தன் கடந்த காலத்தை மறைத்து அவர்களுடன் நட்பாக பழகுகிறாள். பின்னாட்களில் அவளின் கடந்த காலம் நண்பர்களுக்கு தெரிகிறது.

தரகர்களின் பிடியில் இருந்து அவளை காப்பாற்றி அவள் தாய், தந்தையிடம் சேர்ந்தாளா இல்லையா என்பதே படத்தின் திரைக்கதை. இதில் நடிகர்கள் யாரையும் பயன்படுத்தாமல் அந்த கிராம மக்களையும், நிஜ தரகர்களையும் நடிக்க வைத்திருக்கிறோம்.

பீகார் மொழியில் ஒரு பாடலை தந்திருக்கிறார் இமான். அவரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் தந்ததோடு படத்தை பாராட்டி இந்த கால கட்டத்தில், பெண்களின் மேல் மரியாதையும் அவர்களின் பாதுகாப்புக்கான விழிப்புணர்ச்சியையும் இந்த திரைப்படம் தந்திருக்கிறது என்றும் தற்போது இது மாதிரியான திரைப்படங்கள் வருவது திரை உலகத்திற்கு மட்டுமல்ல, நமது நாட்டிற்கும் நன்மை பயக்கும் என்றும் கூறி மகிழ்ந்திருக்கிகிறார்கள். இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட வேலைகள் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றார் இயக்குனர் ரவி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - டிரைலர்


;