புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

செய்திகள் 6-Jan-2014 4:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சில தினங்களுக்கு முன் இளையராஜாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பிய இளையராஜாவை மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லி இருந்தார்கள். இதனால் இளையராஜாவால் மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தாலும் வீடியோ கான்ஃப்ரென்ஸ் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார்.

தற்போது பூரண குணம் அடைந்து மீண்டும் தனது இசை பயணத்தை உற்சாகத்தோடு துவங்கியுள்ள இளையராஜா, கவிஞர் சினேகன் நடிக்கும், ‘இராஜ இராஜ சோழனின் போர்வாள்’ படத்திற்காக ஒரு பாடலை நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் கம்போஸ் செய்தார். இளையராஜா உடல்நலம் பெற்று திருமபிய பின் கம்போஸ் செய்யும் முதல் பாடல் இது என்பதாலும், 2014-ல் பதிவு செய்யும் இளையராஜாவின் முதல் பாடல் இது என்பதாலும் ‘இராஜ இராஜ சோழன்…’ படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாணிக் - டீசர்


;