‘திருசியம்’ பட இயக்குனரின் அடுத்த ஹீரோ?

 ‘திருசியம்’ பட இயக்குனரின் அடுத்த ஹீரோ?

செய்திகள் 6-Jan-2014 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து, சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படம், 'திருசியம்’. ஜித்து ஜோசஃப் இயக்கியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சமீபத்திய மலையாள படங்களின் சாதனையை முறியடித்துள்ளது. இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ரீ-மேக் உரிமையை மோகன்லாலின் மைத்துனர் சுரேஷ் கே. பலாஜி வாங்கியிருக்கிறார். சமீபத்தில், ’திருசியம்’ படத்தை பார்த்த நடிகர் விக்ரம் அந்த கதை மீது ஈர்க்கப்பட்டு, இதன் தமிழ் ரீ-மேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இப்படி எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ள ‘திருசியம்’ படத்தை இயக்கிய ஜித்து ஜோசஃப், அடுத்து பிருத்திவிராஜை கதாநாயகனாக நடிக்க வைத்து இயக்க இருக்கிறார். ஏற்கெனவே ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் பிருத்திவிராஜ் நடித்த ’மெம்மரீஸ்’ என்ற மலையாள படமும் ஹிட் ஆகியிருப்பதால் இந்த கூட்டணி மீது இப்போதே எக்கசக்க எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது! இந்தப் படத்தில் பிருத்திவிராஜுக்கான ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாபநாசம் - ஏயா ஏன் வீடியோ பாடல்


;