தமன்னா இடத்தில் காஜல்!

தமன்னா இடத்தில் காஜல்!

செய்திகள் 6-Jan-2014 2:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கின் பாப்புலர் ஹீரோ ராம் சரண் தேஜா நடித்து விரைவில் ரிலீசாகவிருக்கும் படம், ‘யவடு’. இந்தப் படத்தைத் தொடர்ந்து கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ராம் சரண்! இந்தப் படத்தில் ராம்-க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால் தமன்னா இப்போது ‘அகடு’, ‘பாஹுபலி’ ஆகிய தெலுங்கு படங்களிலும், ஒரு சில ஹிந்திப் படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருவதால் அம்மணியிடம் ராம் சரண் தேஜா கேட்கும் தேதிகளில் கால்ஷீட் இல்லையாம்! இதனால் கையை விரித்த தமன்னாவுக்கு பதிலாக ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே, ‘நாயக்’, ‘மகதீரா’ ஆகிய படங்களில் ராம் சரணுடன் காஜல் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் என்பதும், அப்படங்கள் வெற்றிபெற்ற படங்களாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சக்சஸ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கவிருப்பது ராம் சரண் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! தமன்னா, தமிழில் அஜித்துடன் நடித்துள்ள ’வீரம்’ 10-ஆம் தேதி ரிலீசாகவிருப்பது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - டிரைலர்


;