மலையாளத்தில் சூப்பர்மேன்!

மலையாளத்தில் சூப்பர்மேன்!

செய்திகள் 6-Jan-2014 2:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வித்தியாசமான மலையாள படங்களை இயக்கியவர் வினயன். ‘காசி’, என் மன வானில்’ என தமிழிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ள வினயன் தற்போது இயக்கியுள்ள 3டி படம் ‘லிட்டில் சூப்பர் மேன்’. கடந்த சில நாட்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் ரஞ்சித் நடித்திருக்க, இவருடன் ஏராளமான தமிழ் மற்றும் மலையாள நடிகர் – நடிகைகளும் நடித்திருக்கிறார்கள்.

விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளுக்கு கிட்டத்தட்ட மூன்று மாதக் காலம் பிடிக்கும் என்பதால் படத்தை வருகிற கோடை விடுமுறை காலத்தில் அதாவது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். குழந்தைகளை டார்கெட் வைத்து ஏராளமான குள்ள மனிதர்களை நடிக்க வைத்து வினயன் இயக்கிய ’அற்புத தீவு’ திரைப்படம் தென்னிந்திய மொழிகளில் வெளியாகி அனைவரது கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இப்படமும் அனைவரது கவனத்தை பெறும் என்கிறார் வினயன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;