சினிமாவில் ட்வின்ஸ் நாயகிகள்!

சினிமாவில் ட்வின்ஸ் நாயகிகள்!

செய்திகள் 6-Jan-2014 1:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் மனு கண்ணந்தானம் இயக்கும் மலையாள படம் ‘லவ் அன்ட் லவ் ஒன்லி’. மலையாள சினிமாவில் ஏற்கெனவே பல இயக்குனர்கள் பல புதுமைகள் செய்து படங்களை இயக்கியுள்ள நிலையில், இயக்குனர் மனு தனது முதல் படமான, ‘லவ் அன்ட் லவ் ஒன்லி’ படத்தில் ஒரு புதுமையை செய்யவிருக்கிறார். இந்தப் படத்தில் மஹ்பூல் சல்மான் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக ஐனா - ஐமா என்ற இரட்டை சகோதரிகளை அறிமுகப்படுத்துகிறார் மனு!

மலையாள சினிமாவை பொறுத்தவரை இரட்டை சகோதரிகள் கதையின் நாயகிகளாக நடிக்கும் முதல் படம் இதுதானாம்! இந்தப் படத்தின் கதையை டானியல் டேவிட் எழுத, அபிலாஷ் என்.சந்திரன் வசனம் எழுதுகிறார். மஹ்பூல், ஐனா, ஐமா ஆகியோருடன் பகத், சன்னி வெயின், லெனா முதலானோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;