பிரம்மாண்ட பிரசாந்த்!

பிரம்மாண்ட பிரசாந்த்!

செய்திகள் 6-Jan-2014 12:23 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’ படங்களை தொடர்ந்து பிரசாந்த் நடிக்கும் படம் ‘சாகசம்’. இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கும் இந்தப் படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் பிரசாந்துடன் நடிக்கவிருக்கும் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை பிரசாந்தின் பிறந்தநாளான ஏப்ரில் 6-ஆம் தேதி அறிவிக்க இருக்கிறார்கள்! ’சாகசம்’ படத்தின் பாடல் காட்சிகளை ஆஸ்திரேலியா, இஸ்தான்புல், குவைத், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் இயற்கை எழிலான லொகேஷன்களில் படமாக விருக்கிறது. இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரம்மாண்ட கேரக்டரில் நடிக்க இருக்கிறார் பிரசாந்த்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரூஸ் லீ - டீசர்


;