‘சேட்டை’ இயக்குனரின் அடுத்த படம்!

 ‘சேட்டை’ இயக்குனரின் அடுத்த படம்!

செய்திகள் 6-Jan-2014 12:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, வந்தான் வென்றான்’, ’சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், இப்போது, ‘சக்கரை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விமல், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பனின், ‘குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தற்போது அதர்வா நடிப்பில், ‘ஈட்டி’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே வேறு மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் ரீ-மேக் செய்து இயக்கிய கண்ணன், ‘இந்தப் படம் ரீ-மேக் கிடையாது, இந்தக் கதையை தான் சொந்தமாக எழுதியது’ என்கிறார்! கிராமத்துப் பின்னணியில் நடக்கும் காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு படத்தில் நிறைய ‘ஸ்வீட்’டான விஷயங்கள் இருக்கிறதாம்! இந்தப் படத்திறகு முத்தையா ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - டிரைலர்


;