அஜித், விஜய்யுடன் மோதும் சத்யராஜ்!

அஜித், விஜய்யுடன் மோதும் சத்யராஜ்!

செய்திகள் 6-Jan-2014 11:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

யுனிவர்சல் புரொடக்ஷன் தயாரிப்பில் சத்யராஜ், அஜய்ராகவ், நந்தா, சரவணன் நடிக்க, எஸ்.டி.ரமேஷ்செல்வம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘கலவரம்’. இந்தப் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் சத்யராஜ் ஒரு விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் ரமேஷ்செல்வம் கூறியபோது,

“ஒரு தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தையோ அதன் வீழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சேர்க்கும் திட்டமிட்ட சதியே ‘கலவரம்’. ஒரு உண்மை கலவரத்தை மையமாக கொண்டும், அரசியலை கருவாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலையிலிருந்து கடைசி வரை, அச்சம்பவ களத்தின் உண்மை முகங்களை வெளிச்சமிட்டு காட்டுவது தான் இக்‘கலவரம்’. இந்தப் படத்தில் கானாபாலா ஒரு பாட்டுக்கு பாடி, நடித்துள்ள ‘சொய்யாங் சொய்யாங்’ என்ற பாடல் காட்சி பக்கா கமர்ஷியலாக இருக்கும்’’ என்றார்.

இப்படம் இந்தமாதம் பொங்கலுக்கு வரும் அஜித்தின் ‘வீரம்’, விஜய்யின் ‘ஜில்லா’ படங்களுடன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;