தள்ளிப்போகிறது அஜித் படம்!

தள்ளிப்போகிறது அஜித் படம்!

செய்திகள் 6-Jan-2014 11:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நாகிரெட்டி விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘வீரம்’. ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 10ஆம் வெளியாகிறது.

இதே நாளில் ‘வீரம்’ படத்தின் தெலுங்கு (டப்பிங்) பதிப்பையும் முதலில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஜனவரி 10ஆம் தேதி ஆந்திராவில் சங்கராந்தியை ஒட்டி மகேஷ்பாபுவின் ‘1’ படமும், ராம்சரண் தேஜாவின் ‘யவடு’ படமும் வெளியாகவிருப்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘வீரம்’ தெலுங்கு டப்பிங்கை இரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘வீரம்’ படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு “வீருடொக்கடே” என்று பெயர் வைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;