தலைப்பு மாறிய டீல்!

தலைப்பு மாறிய டீல்!

செய்திகள் 6-Jan-2014 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தடையற தாக்க’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் நடிக்கும் படம் ’டீல்’. சுறுசுறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படம் குறித்து அருண் விஜய் கூறும்போது, ‘‘சிவஞானம் இயக்கத்தில் படம் நல்லா வந்திருக்கு. இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்திருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. அத்துடன் படத்தின் ‘டீல்’ என்ற டைட்டிலை ‘வா டீல்’ என்று மாற்றி வைத்திருக்கிறோம். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்றார்.

இந்தப் படத்தில் அருண் விஜய் - கார்த்திகா நாயருடன் வம்சி, சதீஷ், ரேணுகா, ஜெயபிரகாஷ் முதலானோரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை சுகுமார் ஏற்றிருக்க, தமன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;