‘வீரம்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

 ‘வீரம்’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

செய்திகள் 4-Jan-2014 4:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ’வீரம்’ படம் ரிலீசாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்படம் மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘வல்லியேட்டன்’ என்ற படத்தின் கதை என்றும், ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளை’ படத்தின் சாயலில் உருவாகியுள்ள படம் என்றும் பரபவலாக பேசப்பட்டு வருகிறது. இதை கேள்விப்பட்ட, ‘வீரம்’ படத்தின் இயக்குனர் சிவா அந்தத் தகவல்களை மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.

‘‘வீரம்’ அண்ணன் மற்றும் நான்கு தம்பிகள் பற்றிய கிராமத்து கதை. அதைப்போல மலையாள படமான ‘வல்லியேட்டன்’ படமும் அண்ணன் மற்றும் நான்கு தம்பிகள் பற்றிய கதை தான்! ‘முரட்டுக்காளை’யும் அண்ணன் - தம்பிகள் சம்பந்தமான கதை தான்! இதை வைத்து, ’வீரம்’ அந்தப் படத்தின் கதை, இந்தப் படத்தின் கதை என்று கதைக்கிறார்கள்! இதில் சிறிதும் உண்மையில்லை. ‘வீரம்’ முழுக்க முழுக்க அந்தப் படங்களின் கதைகளிலிருந்து மாறுபட்ட கதையைக் கொண்ட படம்! இது தமிழுக்காக நேரடியாக எழுதப்பட்ட வித்தியாசமான கதை! அதை நீங்கள் படத்தை பார்க்கும்போது தெரிந்துகொள்வீர்கள்’’ என்கிறார் சிவா, ‘வீரம்’ நிறைந்த குரலில்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;