பாலிவுட்டில் என்ட்ரியாகும் சரத்குமார்!

பாலிவுட்டில் என்ட்ரியாகும் சரத்குமார்!

செய்திகள் 4-Jan-2014 3:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது, ‘முனி 3 கங்கா’ படத்தை இயக்கி வரும் ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தை முடித்ததும், ‘காஞ்சனா’ ஹிந்தி ரீ-மேக் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த கேரக்டரில் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கிறார். சரத்குமார் நடித்த கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆராயந்த தயாரிப்பு தரப்பினருக்கு யாரும் செட் ஆகாத நிலையில், தமிழில் நடித்த சரத்குமாரையே அந்த கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்று ராகவா லாரன்ஸிடம் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

லாரன்ஸுக்கும் அது சரி என்று படவே, சரத்குமார் தனது முதல் பாலிவுட் என்ட்ரியாக இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்! தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ள சரத்குமாருக்கு நீண்ட நாட்களாக ஒரு ஹிந்திப் படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது! அந்த ஆசை, ‘காஞ்சனா’ ஹிந்திப் படத்தின் மூலம் நிறைவேற இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;